[an error occurred while processing this directive]

World Travel Guides பாங்காக்கில் சிறிய மற்றும் பெரிய ஆலயங்கள்
வாட் போவோன்னிவெட்


Exotic Tours of Asia
 Asia Travel Guide Compare Hotel Room Rates from different Booking Sites     Follow Me on Pinterest 
  Bangkok Budget Travel Guide Bangkok Travel Tips Thailand Budget Travel Guide Asia Budget Travel Guide EarthDocumentary World Budget Travel Guide UNESCO World Heritage Sites   Compare Hotel Room Rates from different Booking Sites


Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா


‘க்ஹ்லோங் பங்லம்ப்ஹு’ (Khlong Banglamphu) வாய்க்காலுக்கு (canal) அந்தப் பக்கத்தில் உள்ள ‘பிரா சுமன்’ (Phra Sumen Road) சாலையின் அருகில் உள்ளதே ‘வாட் போவோன்னிவெட்’ (Wat-Bowonniwet) என்ற புத்தர் ஆலயம். பத்தன்போதாம் நூற்றாண்டில் (19th century.) அதை மன்னன் ராமா III என்பவர் கட்டினார். சீனர்களின் கட்டிட அமைப்பில் உள்ள இந்த ஆலயம் மன்னனின் கட்டிட கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்து உள்ளது. ‘வாட் போவோன்னிவெட்டின்’ உள்ளே மத்தியில் ‘தங்க சேடியும்’ இரண்டு புறமும் தொழுகை இடங்களும் ஒரே மாதிரியான அமைப்பில் உள்ளன . துறவியும் ஓவியரானவருமான ‘க்ஹ்ருவ இன் கஹாங்’ (monk-painter Khrua In Khong) என்பவர் ‘பிரா சுமனுக்கு’ அருகில் உள்ள தொழுகை இடத்தில் உள்ள சுவர் சித்திரங்களை வரைந்தவர். அவர் தாய் ஆலய சுவர் சித்திரங்களை ஐரோப்பியக் (Western concept) கலாசாரக் கலையுடன் இணைத்து வரைவதில் திறமை பெற்றவராக இருந்துள்ளார். ‘வாட் போவோன்னிவெட்டின்’ உள்ளே உள்ள ‘சுகோதாய்’ (Sukhothai) காலத்திய சிலை அமைப்பில் செய்யப்பட்டு உள்ள புத்தர் சிலையின் பெயர் ‘பிரா புத்த சினசாரா’ (Phra Buddha Chinasara) என்பது. மன்னன் ‘மன்கோட்’ (King Mongkut) என்பவர் ‘வாட் போவோன்னிவெட்டில்’ 27 வருடங்கள் ‘தம்மாயுட்’ வழி புத்த மதத்தின் (Tammayut sect of Buddhism) கட்டுப்பாடுகளை கடுமையாக கடை பிடித்து மடாதிபதியாக இருந்தார். ‘வாட் போவோன்னிவெட்’ இன்றும் ‘தம்மாயுட்’ வழியினரின் தலைமை பீடமாக இருந்து வருகின்றது. மன்கோட்டைத் தவிர மேலும் பல தாய் மன்னர்கள் தற்போது மன்னராக உள்ள மேன்மை மிகு மன்னர் ராமா IX எனும் ‘புமிபோலை ‘(His Majesty King Bhumibol) சேர்த்து அங்கு துறவிகளாக (monkhood ) இருந்துள்ளார்கள்.

Wat Bowonniwet, Bangkok
வாட் போவோன்னிவெட்
Author: Heinrich Damm (Creative Commons Attribution 2.0 Generic)

அங்கு செல்லும் வழி மற்றும் விலாசம்

அங்கு ஒரு டாஸ்சியில் செல்லலாம். விலாசம் : 248 ‘தனன் பிரா சுமன்’

‘வாட் போவோன்னிவெட்’ செல்லும் வழிக்கான தரை படம் காண இங்கே இங்கே கிளிக் செய்யவும் Click here

Return to Thailand Budget Travel Guide



என்னைப் போல எழுதுங்கள்......என்னைப் போல சம்பாதியுங்கள்

மற்றவர்கள் வேலை செய்து மாதம் சம்பாதிப்பதை விட அதிகமாக என்னுடைய இணையதளத்தின் மூலம் சம்பாதிக்கின்றேன். அதனால் என்னை வேலை அற்ற ஆனால் மகிழ்ச்சியான மனிதன் என்று கூடக் கூறலாம். இதை அனைவராலும் செய்ய முடியும். ஆனால் அது பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவில்லை. நீங்கள் ஒரு இணையத்தளம் வைத்து இருந்தால் அதன் மூலம் நிறைய சம்பாதிக்கலாம். நான் எழுதுவதில் ஐந்து சதவிகிதம் எழுதினால் கூட நீங்கள் நிறைய சம்பாதிக்கலாம். நான் இணையதளத்தில் பணத்துக்காக எழுதவில்லை. அது எனக்கு பிடித்த ஒரு பொழுதுபோக்கு. நிறையப்பேர் இணையதளங்களில் எழுதுகிறார்கள் ஆனால் அவர்கள் பணம் பெற்றுக் கொள்வது இல்லை . நீங்கள் அப்படிப்பட்டவர் என்றால் அதை நிறுத்திவிட்டு பணம் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள்.

குறைந்த கட்டணத்தில் தங்கும் இடங்கள்

குறைந்த கட்டணத்தில் தங்குமிடம் என்பது சுற்றுலா பயணிகள் தங்களிடம் உள்ள நிதி நிலைக்கு ஏற்ப தங்க வசதி உள்ள ஹோட்டல், தாங்கும் விடுதிகள் மற்றும் தனியார் வீடுகளில் தங்க இடம் போன்றவற்றைக் குறிக்கும். பெரிய ஹோட்டல்களில் தங்கி தேவையற்று பணத்தை செலவிடுவதைவிட குறைந்த கட்டணத்தில் உள்ள இடங்களில் தங்கி மிச்சமாகும் அந்த பணத்தை சுற்றுலாவில் வேறு காரியங்களுக்கு பயன்படுத்தலாம். தனியார் வீடுகளில் ஒரு அறை, ஒரே அறையில் இரண்டு பேர்கள் தங்கும் இடங்கள் மற்றும் ஒரே அறையில் பலர் தங்கிக் கொள்ள தனித்தனியாக போடப்பட்டு உள்ள கட்டில்கள் போன்றவற்றில் தங்கி பணத்தை மிச்சப்படுத்திக் கொள்ளலாம். அப்படிப்பட்ட இடங்களை இணையதளத்தின் மூலம் தேடிக் கண்டு பிடித்து இணையத்தளம் மூலம் இடங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு உதவியாக இணையதளங்கள் மூலம் பெனாங்கில் உள்ள ஹோட்டல்கள், மற்றும் விடுதிகள் பக்கத்திற்குச் சென்று அங்கு குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் தங்குமிடங்களின் முகவரிகளை கண்டுபிடித்துக் கொள்ளலாம்

சுற்றுலா- குறைந்த கட்டண விமான டிக்கட்டுகள் , வாடகை கார்

நீங்கள் சுற்றுலாவுக்குப் போகும் முன் குறைந்த கட்டண விமான டிக்கட்டுகள் , வாடகைக்குக் கார் போன்றவை அல்லது குறைந்த கட்டணத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தரும் நிறுவனத்தை கண்டுபிடித்து அதன் மூலம் பிரயாண ஏற்பாடுகளை செய்து கொள்ள பயண வழிகள், கட்டணங்கள் என்ற தளத்தைப் பாருங்கள்.


தாய்லாந்து மொழியை விரைவாக கற்றுக் கொள்ளுங்கள்

நீங்கள் தாய்லாந்து நாட்டுக்கு செல்ல உள்ளீர்களா ? அங்கு செல்லும் முன் அந்த நாட்டு மொழியில் பேச , அங்குள்ளவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ள மற்றும் அங்குள்ளவற்றை படிக்க உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ளுங்கள். முக்கியமாக வேலை விஷயமாக அங்கு செல்லும் முன் நீங்கள் அந்த நாட்டு மொழியை கற்பதின் மூலம் உங்கள் பயணம் வெற்றிகரமாக அமையும் . அந்த நாட்டு மொழியைக் கற்க, இங்கே கிளிக் செய்யவும் !


தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.





Bookmark and Share   Follow EarthDocumentary on Twitter

Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved.
Angkor Travel Tips is researched and written by Timothy Tye. The information provided is in goodwill and is believed to be correct and up-to-date at time of writing. We disclaim responsible for its usage, and encourage users to recheck the information before their trip. Some photos are provided by Panoramio. Photos provided by Panoramio are under the copyright of their owners. They may only be used under the terms & conditions specified by Panoramio. Photographs that belong to Timothy Tye are copyrighted and may not be reused unless you first obtain permission. All of Tim's photographs are available for commercial use under the following licensing terms. To contact Tim, write to: